பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரீதேவி. தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் சில படங்களில் நடித்திருந்த அவர், ஆரம்ப காலத்திலேயே சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க முயன்றார். பின்னர் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையை நிலைநிறுத்திக் கொண்டதால், முழுநேர திரைப்பட நடிப்பிலிருந்து விலகினார்.

திரையுலகை விட்டு விலகிய பின்னரும், அவர் முற்றிலும் பொதுவெளியில் இருந்து மறைந்துவிடவில்லை. சின்னத்திரை நிகழ்ச்சிகளில் அவ்வப்போது கலந்து கொண்டு ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அவர், தனது தினசரி வாழ்க்கை, குடும்ப தருணங்கள் மற்றும் பயண அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் அவர் தனது குடும்பத்துடன் வெளியில் சென்றிருந்த போது எடுத்த சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்களில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிடும் தருணங்கள் இடம் பெற்றுள்ளன. இவை தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வைரலாகி வருகின்றன.
அவரின் இயல்பான வாழ்க்கை முறையும், குடும்பத்துடன் இருக்கும் மகிழ்ச்சியான தருணங்களும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதனால் அந்த பதிவுக்கு லைக்குகள் மற்றும் கமெண்ட்ஸ் குவிந்து வருகின்றன.
Listen News!