தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகையாக திகழும் அனுஷ்கா ஷெட்டியின் புதிய திரைப்படமான ‘காட்டி’ தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், இப்படம் தொடர்பான ஒரு முக்கியமான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
இயக்குநர் கிரீஷ் இயக்கியுள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் திரைப்படத்தை எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் ஓரளவு ஏமாற்றமடைந்தாலும், படக்குழுவின் விளக்கம் ரசிகர்களிடையே புரிதலை ஏற்படுத்தி வருகிறது.
‘பாகுபலி’, ‘அருந்ததி’, ‘சிங்கம்’ போன்ற படங்களில் நடித்துள்ள அனுஷ்கா ஷெட்டிக்கு, ‘காட்டி’ ஒரு முக்கிய திரைப்படமாகக் கருதப்படுகிறது. கடந்த சில வருடங்களாக நடிப்பிலிருந்து விலகியிருந்த அனுஷ்கா, இந்தப் படத்தின் மூலம் மீண்டும் முழுமையாக திரையில் தோன்றுகிறார்.
அந்தவகையில், தற்போது தயாரிப்பு குழுவின் அறிவிப்பின் அடிப்படையில், "படத்தின் வேலைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. ஆனால், ஒரு சிறந்த, நேர்த்தியான அனுபவத்தை ரசிகர்களுக்கு அளிக்க, மேலும் சிறிது நேரம் தேவைப்படுகிறது. அதனால், படம் இன்னும் சில நாட்கள் தள்ளி வெளியாகும் என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறோம்," என்று கூறியுள்ளனர்.
அனுஷ்கா ரசிகர்கள் முதல் சினிமா விமர்சகர்கள் வரை அனைவரும் இப்படம் எப்போது வருகிறது என எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டதால் சிலர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
Listen News!