• May 22 2025

சண்முக பாண்டியனின் “படை தலைவன்” தற்காலிகமாக தள்ளிவைப்பு..! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

சண்முக பாண்டியன் நடித்த “படை தலைவன்” திரைப்படம் எதிர்பார்த்த படி மே 23 திரையரங்குகளில் வெளியாகும் என சமீபகாலமாக தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால், எதிர்பாராத வகையில் திரையரங்க ஒதுக்கீட்டு சிக்கல்கள் காரணமாக இப்படத்தின் வெளியீடு தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.


இப்படத்திற்காக படக்குழு மிகுந்த உழைப்பினை மேற்கொண்டிருந்தனர். அத்துடன், படை தலைவன் படம் தனித்துப் பார்க்கும் ஒரு சாதாரண action entertainer படமாக இல்லாது சமூகத்தைப் பிரதிபலிக்கும் அரசியல் பின்னணியுடன் கூடிய கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் திரைப்படங்களை நேசிக்கும் ரசிகர்கள், “படை தலைவன்” திரையரங்கிற்கு வருவது குறித்து அதிகளவான எதிர்பார்ப்பினை வளர்த்திருந்தனர். அதனால் தான் இப்படம் தள்ளிவைக்கப்பட்ட தகவல் அந்த ரசிகர்களுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


படக்குழுவின் தகவலின்படி, “படை தலைவன்” படத்திற்கு தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் திரையரங்க ஒதுக்கீடு செய்ய முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. தற்போது பெரும்பாலான திரையரங்குகளில் முன்னதாகவே திட்டமிடப்பட்ட ஏனைய பெரிய படங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. மேலும், இப்படத்திற்குத் தேவையான திரையரங்குகள் கிடைக்காததால் தான் இந்தமுடிவினை எடுத்துள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. 

Advertisement

Advertisement