• May 23 2025

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ‘மாமன்’ பட டிரெய்லர்..! மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ள சூரி, தற்போது ஹீரோவாக தனது பயணத்தை தொடர்கிறார். அவரின் புதிய திரைப்படமான ‘மாமன்’ டிரெய்லர் இன்று வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், ஒரு தாய் – மாமன் இடையிலான உறவை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட உணர்வு பூர்வமான குடும்பத் திரைப்படம் ஆகும். மே 16ம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்திற்கான புரோமோஷன் வேலைகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.


நகைச்சுவை நடிகராகப் புகழ்பெற்ற சூரி, பல ஆண்டுகளாக தமிழர் மனங்களில் நெருக்கமாக இடம்பிடித்து வந்தவர். ‘விடுதலை’ போன்ற படங்களில் தனது நடிப்புத்திறனை வெளிப்படுத்திய பின், தற்போது ‘மாமன்’ மூலமாக மீண்டும் ஹீரோவாக களம் இறங்கியுள்ளார். 

இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். மேலும் ராஜ்கிரண், சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் இத்திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒவ்வொருவரும் கதையின் மையத்தைக் கொண்டு செல்லும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement