நகைச்சுவை யூடியூபர்களில் தனி அடையாளத்தை உருவாக்கியவர் தான் ராகுல் டிக்கி. சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்த இவர், தனது அசத்தலான நடிப்பு மூலம் இளைஞர்களின் மனதைக் கவர்ந்திருந்தார். இத்தகைய சிறப்பான மனிதரின் பயணத்தை திடீரென முறியடிக்கும் விதமாக 2024 ஜனவரி 16ம் திகதி ஒரு சம்பவம் நிகழ்ந்திருந்தது.
இளம் வயதில் உயிரிழந்த அவரது மரணம், ரசிகர்கள் மட்டுமல்லாமல் யூடியூப் சமூகத்தையே உலுக்கியது. ரசிகர்கள் அவரது வீடியோக்களை மறுபடியும் ஷேர் செய்து, “நீங்க எப்போவும் நம்ம மனசுல இருப்பீங்க” என மெளன அஞ்சலிகளைச் செய்தனர்.
இந்நிலையில், சோகத்தில் மூழ்கியிருந்த அவரது மனைவி தேவிகாஸ்ரீ, திடீரென ராகுல் டிக்கியின் இன்ஸ்டாகிராம் ஐடியை மீண்டும் செயல்படுத்தியுள்ளார். அத்துடன், அந்த ஐடியில் வீடியோக்களையும் பதிவேற்ற தொடங்கியுள்ளார். அதில் சுவாரஸ்யம் என்னவென்றால், அந்த வீடியோக்களை ராகுல் டிக்கி ஸ்டைலிலே தேவிகாஸ்ரீ வெளியிட்டிருந்தார்.
இதுகுறித்து தேவிகாஸ்ரீ கூறியதாவது, “நான் அந்த விபத்துக்குப் பிறகு ஒரு வாரம் நிம்மதியா தூங்கல. ராகுல் போனத என்னால இன்னும் நம்ப முடியாமல் இருக்கு. ஒரு நாள் அவர் வீடியோவை பார்த்துக் கொண்டிருந்த போது எனக்கு தோணிச்சு அவர் விட்ட இடத்தில நான்தான் நிற்கணும். அவரின்ட ரசிகர்களை சிரிக்க வைக்கணும் என்று தோணுச்சு." என்றார்.
Listen News!