• Apr 15 2026

ரஜினி- கமல் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டால் குஷியான ரசிகர்கள்.!

shali / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலக ரசிகர்கள் நீண்ட நாட்களாகக் காத்திருந்த அதிரடி கூட்டணி தற்போது நனவாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல் ஹாசன் இணைந்து புதிய படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை இளம் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார் என்ற தகவல் வெளியாகியதிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.


இப்படத்தின் அறிமுக ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இரு லெஜண்ட்களும் ஒரே ஃப்ரேமில் தோன்றிய அந்த காட்சிகள் ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தின. பலரும் “தமிழ் சினிமாவின் வரலாற்று தருணம்” என்று பதிவுகள் செய்து கொண்டாடினர்.

ப்ரோமோவில் காட்டப்பட்டிருந்த காட்சிகள் ஸ்டைலாகவும், கம்பீரமாகவும் இருந்ததால், படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு மேலும் உயர்ந்தது.

இந்நிலையில், இப்படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து நடிக்கும் இந்தப் படம் 80ஸ், 90ஸ் காலத்தைய பாணியில் அனலாக் பிலிம் கேமராவில் படமாக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குநர் நெல்சன், இந்த படத்தை பழைய அனலாக் பிலிம் முறையில் இயக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. டிஜிட்டல் தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்தும் இக்காலத்தில், பிலிம் கேமராவை பயன்படுத்தும் முயற்சி ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ஆரம்பத்தில் ப்ரோமோ படப்பிடிப்பும் அனலாக் முறையில் எடுக்க திட்டமிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் நேரமின்மை காரணமாக, ப்ரோமோ டிஜிட்டல் முறையில் படமாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Advertisement

Advertisement