• May 16 2026

விவாகரத்து விஜய்க்கு மட்டுமா நடக்குது? தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடக் கூடாது.! - ஆரி

shali / 2 months ago

Advertisement

Listen News!

சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நடிகர் ஆரி, நடிகர் விஜய் குறித்து சமூக வலைத்தளங்களில் பரவி வரும் விவாகரத்து சர்ச்சையைப் பற்றி தனது கருத்தை பகிர்ந்துள்ளார். அவரது இந்த கருத்து தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.


செய்தியாளர்கள் விஜய்யின் குடும்ப வாழ்க்கை குறித்து கேள்வி எழுப்பிய போது, ஆரி தெளிவான பதிலை அளித்தார். அதாவது, “நடிகரா மட்டுமல்ல, யாரோட தனிப்பட்ட வாழ்க்கையையும் கதைக்கிறது இங்க யாருக்கும் உரிமை கிடையாது. பொது வாழ்க்கைக்கு வரும் போது இது மாதிரியான விஷயங்கள் விவாதப்பொருளாவது எல்லாருக்குமே நடக்கும். அதை தவிர்க்கணும் என்று நினைக்கிறேன்.” என்று அவர் கூறினார்.

மேலும், “அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு நான் கருத்து சொல்ல முடியாது. விவாகரத்து விஜய்க்கு மட்டுமா நடக்குது? இது இரண்டு பேரின் தனிப்பட்ட வாழ்க்கை சம்பவம். அதுக்குள்ள போய் தனி மனிதராக கருத்து சொல்லக் கூடாது,” என்றும் அவர் வலியுறுத்தினார்.


கடந்த சில நாட்களாக நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோரின் உறவு குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. குறிப்பாக விவாகரத்து குறித்த கருத்துக்கள் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.

ஆனால் இதுகுறித்து விஜய் அல்லது அவரது குடும்பத்தினர் தரப்பில் எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில், ஆரியின் இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது. 

Advertisement

Advertisement