• May 16 2026

குறைந்த நாட்களில் இவ்வளவு கோடிகளா? "துரந்தர் 2" படைத்த உலகளாவிய வசூல் சாதனை..

shali / 1 month ago

Advertisement

Listen News!

உலகம் முழுவதும் வசூலில் சாதனை படைத்து வரும் திரைப்படமாக “துரந்தர் 2” தற்போது பேசப்படுகிறது. இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் உருவான இந்த படம், வெளியானதிலிருந்து ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.


இந்தப் படத்தில் சாரா அர்ஜுன், மாதவன், அர்ஜுன் ராம்பால், சஞ்சய் தத் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அவர்களின் நடிப்பும், படத்தின் கதைம்சமும் ரசிகர்களை கவர்ந்ததாக கூறப்படுகிறது.

சமீபத்திய தகவலின்படி, “துரந்தர் 2” திரைப்படம் உலகம் முழுவதும் 1,500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்தியாவில் மிகக் குறைந்த காலத்தில் இந்த சாதனையை எட்டிய திரைப்படமாகவும் இது பதிவாகியுள்ளது.

இந்த சாதனை, படத்தின் மீதான மக்களின் எதிர்பார்ப்பு மற்றும் வரவேற்பை வெளிப்படுத்துகிறது. விமர்சகர்களிடமிருந்தும் நல்ல கருத்துக்கள் கிடைத்ததால், குடும்பத்துடன் பார்க்கும் படமாகவும் இது பரிந்துரைக்கப்படுகிறது.

தற்போது இந்த வசூல் சாதனை திரை உலகில் பெரும் பேசுபொருளாக மாறி, “துரந்தர் 2” படக்குழுவுக்கு பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளது. 


Advertisement

Advertisement