• May 16 2026

1500 கோடி வசூல்.. ஆனால் கதை திருட்டா? துரந்தர் 2 இயக்குநருக்கு எதிராக கிளம்பிய எதிர்ப்பு

shali / 1 month ago

Advertisement

Listen News!

பெரும் வசூல் சாதனையை படைத்து வரும் “துரந்தர் 2” திரைப்படம் தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. அதாவது, இயக்குநர் ஆதித்யா தார் மீது கதை திருட்டு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

“துரந்தர்” முதல் பாகம் 1300 கோடி ரூபாய் வசூலை எட்டிய நிலையில், அதன் தொடர்ச்சியாக வெளியான இரண்டாம் பாகம் உலகளவில் 1500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து வெற்றிநடை போட்டு வருகிறது. இந்த வெற்றியின் மத்தியில் தான் இந்த புதிய சர்ச்சை எழுந்துள்ளது.


சந்தோஷ் குமார் ஆர்.எஸ். என்ற எழுத்தாளர், “தாவூத் சாகேப்” என்ற பெயரில் தாம் எழுதி எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்த கதையை அடிப்படையாகக் கொண்டு தான் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். அவர் கூறுகையில், சமீபத்தில் நண்பர்களின் பரிந்துரையின்படி படம் பார்த்தபோது, தனது கதை அப்படியே திரையில் ஓடுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும், “இந்த விஷயத்தை சும்மா விடமாட்டேன்” எனவும் அவர் உறுதியாக கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டு பாலிவுட்டில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இயக்குநர் ஆதித்யா தார் தரப்பில் இதுகுறித்து இதுவரை எந்த விளக்கமும் வெளியாகவில்லை. உண்மையா அல்லது தவறான குற்றச்சாட்டா என்பது குறித்து அடுத்தடுத்த விசாரணைகளில் தான் தெளிவு கிடைக்கும்.

Advertisement

Advertisement