• May 17 2025

நடிகர் சித்தார்த்தைப் பாராட்டிய கிரிக்கெட் வீரர்...! எதற்காக தெரியுமா?

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சித்தார்த்தின் புதிய திரைப்படமான "டெஸ்ட்" சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. கிரிக்கெட் விளையாட்டு மற்றும் உணர்வுப்பூர்வமான கதைக்களங்களுடன் அமைந்துள்ள இந்தப் படம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

"டெஸ்ட்" திரைப்படம் கிரிக்கெட் மற்றும் அதன் பின்னணியில் உள்ள உழைப்பை, பிரச்சனைகள் மற்றும் வெற்றிகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இது போன்ற விளையாட்டு சார்ந்த கதைகள் அதிகம் இல்லாததால், இந்தப் படம் ஒரு புதிய பரிமாணமாக இருக்கும் என்று ரசிகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.


இந்தப் படத்திற்கான பெரிய பாராட்டுகளுள் ஒன்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ரவிச்சந்திரன் அஷ்வினின் கருத்தாகும். அவர் "டெஸ்ட்" திரைப்படத்தைப் பார்த்த பிறகு சித்தார்த்தின் நடிப்பை பாராட்டியதோடு, அவர் அதில் உண்மையான கிரிக்கெட் வீரரைப் போலவே இருந்தார் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இப்படத்தின் மூலம் அவருக்கு விளையாட்டு மீதுள்ள அன்பும் தெரிகிறது என்றார்.

மேலும் இந்தப்  படம் அவருடைய திரையுலக வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக இருக்கும் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார். அஷ்வின் கூறிய இந்தக் கருத்துக்கள், சித்தார்த்தின் நடிப்பிற்கு மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. இது ஒரு விளையாட்டு கதையை மையமாகக் கொண்ட திரைப்படம் என்பதால் ரசிகர்கள் பல்வேறு விதமான கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement

Advertisement