பிரபல நடிகர் தனுஷ் தற்போது படம் நடிப்பது மட்டுமன்றி இயக்குநர் தயாரிப்பாளராகவும் பணியாற்றி வருகின்றார். இவர் சமீபத்தில் இயக்கிய "நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் " ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்தும் "இட்லி கடை " எனும் படத்தை இயக்கி நடித்து வருகின்றார். இவர் தற்போது "குபேரா" எனும் பட படப்பிடிப்பில் பிஸியாக இருக்கின்றார்.
அதனை முடித்துவிட்டு இவர் போர் தொழில் இயக்குநர் விக்கினேஷ் ராஜா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தினை வேல்ஸ் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தினை 90 நாட்கள் எடுத்து முடிப்பதற்கு தீர்மானித்து இருக்கின்றனர்.
தனுஷின் அடுத்த பட சூட்டிங் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் "டிராகன் " பட நடிகை கஜாடு லோகரை தனுஷிற்கு ஜோடியாக நடிக்க வைப்பதற்கான பேச்சு வார்த்தைகள் இடம்பெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
Listen News!