தமிழ் சினிமாவில் எப்போதும் புதிய முயற்சிகளை செய்வதில் முன்னோடியானவர் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். அவருடன் இணைந்து, ‘ரெட்ரோ’ என்ற புதிய ரொமான்ஸ் மற்றும் த்ரில்லர் படத்தில் சூர்யா நடித்துள்ளார். இந்தப் படம் கடந்த வாரம் திரைக்கு வந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ‘ரெட்ரோ’ திரைப்படத்தை பார்த்து விட்டு படத்தையும், நடிகர் சூர்யாவையும் பாராட்டியுள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இந்தத் தகவலை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
‘ரெட்ரோ’ படத்தில் சூர்யா, தனது புது தோற்றத்திலும், வித்தியாசமான கதாப்பாத்திரத்திலும் மிக அர்ப்பணிப்புடன் நடித்துள்ளார். பூஜா ஹெக்டே, கிஷோர் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம், சூர்யாவின் கேரியரில் முக்கிய இடம் பெற்றிருக்கின்றது.
இப்படத்தை நேரில் பார்த்த ரஜினிகாந்த், தனது மனதின் ஆழத்தில் இருந்து படக்குழுவை நேரில் தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார். குறிப்பாக அவர், “நடிகர் சூர்யா இந்த படத்தில் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். படத்தின் கடைசி 40 நிமிடங்கள் அற்புதமாக இருந்தது. படம் முழுவதும் குழுவின் உழைப்பு தெரிகிறது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சிறந்த வேலை செய்துள்ளார்.” என்று பாராட்டியுள்ளார். இந்தப் பாராட்டைப் பெற்ற இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், தனது X தளப் பக்கத்தில் ரஜினியின் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
Listen News!