• May 17 2025

ரஜினியின் "ராக்கம்மா" பாடல் எப்படி உருவானது தெரியுமா..?இளையராஜா பகிர்ந்த உண்மை..!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

சமீபத்தில் ஒரு சிறப்பான நேர்காணலில் இளையராஜா கலந்து கொண்டு ரசிகர்களை மகிழ்விக்கும் படியான பல அரிய அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். குறிப்பாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியாகி வெற்றிகண்ட "தளபதி" படத்தில் இடம் பெற்ற "ராக்கம்மா கைய தட்டு" என்ற பாடல் உருவான பின்னணியை மிகவும் சுவாரஸ்யமாக விபரித்தார்.

இளையராஜாவும் மணிரத்தினமும் இணைந்த காலத்தில் உருவான "தளபதி" திரைப்படம், இசை ரசிகர்களுக்கு கொண்டாட்டமாகவே காணப்பட்டது. இதில் ரஜினிகாந்தும், ஸ்ரீதேவியும் நடித்திருந்தனர். இப்படத்தில் இடம்பெற்ற "ராக்கம்மா கைய தட்டு" இன்றும் பாடல் வரிசையில் உச்சியிலேயே திகழ்கின்றது.


அந்தப் பாடலைப் படைக்கும் போது ரஜினியின் ஸ்டைல் மற்றும் நடனம் ரசிகர்களின் மனதில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது. இளையராஜா அப்படத்தில் ஹீரோயினின் முகபாவனைக் காட்சிக்கு எதையாவது தனியாகச் சேர்க்க வேண்டும் என்று நினைத்து திடீரென படப்பிடிப்பின் போது 'குனித்த புருவமும்…' என்ற தேவாரத்தின் வரிகளை இணைக்க நினைத்ததாகக் கூறியுள்ளார். 

இந்தப் பாடலில் அத்தேவாரத்தை சேர்த்ததால் இயக்குநரும் படக்குழுவும் மிகுந்த மகிழ்ச்சியடைந்ததாகவும், ரஜினி அந்த இசையைக் கேட்டு "இதுதான் ரியல் மாஸ் பாடல் !" என்று பாராட்டினார் என்றும் இளையராஜா கூறியுள்ளார்.


Advertisement

Advertisement