• May 17 2025

வசூல் சாதனை படைத்து வரும் வடிவேலுவின் கேங்கர்ஸ்..2 நாட்களில் எத்தனை கோடி தெரியுமா..?

Mathumitha / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் காமெடி மன்னன் வடிவேலு நடிகராக தன் திறமையை பல வகைகளில் நிரூபித்து வருகிறார். பல பன்முக பரிமாணங்களில் வெற்றிப் படங்களை கொடுத்த அவர் தற்போது மீண்டும் ஒரு காமெடி ரோலில் திரைக்கு வந்துள்ளார். 'மாமன்னன்' படத்தில் சீரியஸ் கதாபாத்திரமாக நடித்த இவர் தற்போது 'கேங்கர்ஸ்' என்ற படத்தில் காமெடி நடிகராக நடித்துள்ளார்.


மதகராஜா பட வெற்றியின் பின்னர் சுந்தர்சி இயக்கிய இரண்டாவது காமெடி படம் என்பதால் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. வெளியான 2 நாளில் ரூ. 4.2 கோடி வசூலித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இப் படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. 


வடிவேலு இந்த படத்தில் காமெடி நடிகராக பெண் கெட்டப்பில் நடித்து அசத்தியிருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் ரசிகர்கள் பலர் படம் பாத்துவிட்டு "பழைய வடிவேல் சார் பாக்கிற vintage feel சுந்தர்சி கொடுத்திருக்கார். ரெண்டு பேரோடையும் காம்போ நல்லா இருக்கு " போன்ற விமர்சனங்களை கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement