• May 17 2025

உர்ஃபி ஜாவித்துக்கு போட்டியாக மாறிய ‘கங்குவா’ நாயகி.. ரொம்ப ஓவராத்தான் போகுது..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல நடிகை உர்ஃபி ஜாவித் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிட்டத்தட்ட தினந்தோறும் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்பதும் சில சமயம் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் முகம் சுளிக்க வைக்கும் அளவுக்கு ஆபாசமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘கங்குவா’ படத்தின் நாயகியாக நடித்து வரும் திஷா பதானி, உர்ஃபி ஜாவித்துக்கு இணையாக கிளாமர் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருப்பதை அடுத்து அந்த புகைப்படங்களுக்கு நான்கு சுமார் 4 லட்சம் லைக் குவிந்துள்ளது.

இந்த போட்டோஷுட் புகைப்படங்களுக்கு ஏராளமான கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது என்றும் உங்களுக்கு போட்டி உர்ஃபி ஜாவித் தான் அதில் எந்த சந்தேகமும் இல்லை என்று ரசிகர்கள் கேலியும் கிண்டலுமாக கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ‘கங்குவா’ படத்தை முடித்துவிட்டு திஷா பதானி தற்போது  பிரபாஸ் கமல்ஹாசன் நடித்த ’கல்கி 2898 ஏடி’ படத்தில் நடித்துள்ளார் என்பதும் அதனை அடுத்து இன்னொரு ஹிந்தி படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட் திரை உலகில் மிக அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக இருக்கும் திஷா பதானிக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் 61 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement