• Jun 14 2026

இந்த பொண்ணுக்கு யாராவது பட வாய்ப்பு கொடுங்கப்பா? இம்சை தாங்க முடியல..

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பற்றி மேலும் பிரபலம் அடைந்தவர் தான் தனலட்சுமி.

இவர் ஆரம்பத்தில் டிக் டாக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தள பக்கங்களின் ஊடாக ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு பெரிதும் மக்களால் பேசப்பட்டவர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவரது நடவடிக்கைகள் பெரும்பாலும் அதிரடியாகவே காணப்பட்டது. சக போட்டியாளர்களை விட்டு வைக்காமல் சண்டை போட்டு அதிரடி காட்டுவதில் கைதேர்ந்தவராக காணப்பட்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு பட வாய்ப்புகள் கிடைக்கும் என நம்பி இருந்த தனலட்சுமிக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது. அவர் இதுவரையில் எந்த படத்திலும் கமிட் ஆகி உள்ளதாக தெரியவில்லை.


இந்த நிலையில், அடிக்கடி ரீல்ஸ் செய்யும் தனலட்சுமி தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா படத்தின் காட்சி ஒன்றை அப்படியே நடித்து வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இந்த பொண்ணுக்கு யாராவது பட வாய்ப்பு கொடுங்க என கமெண்ட் பண்ணி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ,


Advertisement

Advertisement