• Aug 08 2025

DNA படத்தில் கிடைத்த அனுபவம் மறக்க முடியாதது..! – வெற்றி விழாவில் நெகிழச்சியடைந்த அதர்வா.!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

அதர்வா நடித்த புதிய திரைப்படமான "DNA" சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் வெற்றி விழா தற்பொழுது நடைபெற்றுள்ளது. இதில் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர்கள் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.


விழாவில் கலந்து கொண்ட நடிகர் அதர்வா, தன்னுடைய நடிப்புப் பயணம், படத்தில் சந்தித்த அனுபவங்கள், ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பு எனப் பல விடயங்களை உணர்ச்சிபூர்வமாக பகிர்ந்திருந்தார். வெற்றி விழாவில் பேசிய அதர்வா, “நாங்கள் இந்தப் படத்துக்கு வேலை செய்ததெல்லாம், இந்த தருணத்துக்காக தான். எல்லோரும் வந்து ‘படம் நன்றாக இருந்தது’ என்று பாராட்டுகிறார்கள், கைதட்டுகிறார்கள் அதுதான் நம்முடைய வெற்றி. அதற்காகத் தான் நாங்கள் வேலை செய்தோம்” என்றார்.


தொடர்ந்து, “DNA” படப்பிடிப்பு முடிந்ததுடன் இப்படம் குறித்து நம்பிக்கையோடு இருந்தோம். படம் திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் போது, ரசிகர்களிடமிருந்து நேரில் பாராட்டுகள் கிடைக்கும் போது உண்மையான திருப்தி வந்தது” என்றும் தெரிவித்தார். இதனைக் கேட்ட ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement

Advertisement