• May 16 2026

தவெக தலைவர் விஜய் அறிவித்த மொத்த வாக்குறுதிகளும் இவை தானா.? லிஸ்ட் நீளுதே..!!

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மகளிர் தின விழாவை முன்னிட்டு  பல திட்டங்களை அறிவித்துள்ளார். அதில் பெண்களுக்கு மட்டுமின்றி குழந்தைகள் தொடர்பிலும் பல வாக்குறுதிகளை கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் அறிவித்த வாக்குறுதிகள் தற்போது பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது. அதன்படி அறிவித்த வாக்குறுதிகளில், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் பெரிதளவில் பேசப்படுகிறது. தமிழகத்தில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் அரசு தரப்பில் தங்க மோதிரம் மற்றும் வெல்கம் கிட் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய ராணி வேலுநாச்சியார் படை,  வழக்குகளை விசாரிக்க அஞ்சலை அம்மாள் அதிவிரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும், பொது போக்குவரத்தில் செல்லும் பெண்களின் பாதுகாப்பிற்காக ஸ்மார்ட் பேணிக் பட்டன் என்பவற்றையும் அறிமுகம் செய்ய உள்ளார்.


ஜீரோ டார்க் ஸ்பாட் பெண்களின் பாதுகாப்புக்காக கண்காணிக்கப்பட உள்ளது என்றும், ரேஷன் கடைகள் பள்ளி கல்லூரிகளில் பெண்களுக்கு விலையில்லா நாப்கின், சிங்கப் பெண்கள் மேம்பாட்டு திட்டத்திற்கு சுய உதவிகளுக்கு 100% மானியம் எனவும் தன்னுடைய வாக்குறுதிகளை வழங்கியுள்ளார்.

மேலும் அண்ணக் சீர் திட்டத்தின்படி பெண்களின் திருமணத்திற்காக ஒரு பவுன் தங்கமும், தரமான பட்டு சேலையும் தாய் வீட்டிலிருந்து அண்ணன் சீராக வழங்கப்படும். 

1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் பள்ளிக் கல்வி இடைநிற்றல் இல்லாமல் செய்வதற்காக தாய் அல்லது பாதுகாவலர்களுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement