தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா லக்ஷ்மி. மலையாள நடிகையான இவர் தற்போது தமிழிலும் நடித்து வருகின்றார்."ஆக்சன்" படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர்"மாமன்" என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகின்றார். அந்த படத்திற்கான புரோமோஷன் வேலைகள் விறு விறுப்பாக நடை பெற்று வரும் நிலையில் மேடை ஒன்றில் பேசும் போது அவர் கூறிய விடயம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
பண்டிபிரஷாந் இயக்கத்தில் சூரி நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் "மாமன் "இதில் ஹீரோயினாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார்.ஸ்வாசிகா, பாபா பாஸ்கர், பிரகீத் சிவன், பால சரவணன், ஜெய பிரகாஷ் எனப்பலர் நடித்துள்ளார். "குடும்பத்தின் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட இந்த படத்திற்கு ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
அந்த வகையில் ஐஸ்வர்யா லக்ஷ்மி மேடை ஒன்றில் பேசும் போது பலர் என்னிடம் "சூரி கூட நடிக்கிறது உங்களுக்கு ஓகேவா என்று கேட்க்கின்றார்கள் அதற்கு அவர்களிடம் நான் ஏன் அப்படி கேட்க்கின்றீகள்"என்று கேட்டதாகவும் கூறியிருந்தார்.
மேலும் "எனக்கு சூரி சேர் கூட நடிக்கிறது பெருமையா இருக்கின்றது.ஏனென்றால் அவர் மிக பெரிய உயரத்தில் இருக்கின்றார், அவர் மிக நேர்மையான மனிதன்,அவர் பண்ணுகின்ற ஒவ்வெரு காரியத்திலும் நன்மை இருக்கின்றது ,அவர் பேசும் போது மரியாதை,அன்பு இருக்கு அதனால் அவருடன் நடிக்கும் போது பெருமை தான் என்றும் கூறியதுடன் தனக்கு உங்க கூட நடிப்பதற்கு வாய்ப்பு தந்தமைக்கு நன்றியும் தெரிவித்திருந்தார்.இதனை பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
Listen News!