• Apr 26 2025

மீண்டும் பராசக்தி படத்திற்கு எதிர்ப்பா? வியப்பில் ரசிகர்கள்!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

 திரையுலகின் முன்னணி நடிகர்களான  விஜய் ஆண்டனி மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் இந்த வருடம் வெளியிடவுள்ள தமது படங்களுக்கு "பராசக்தி " என்ற டைட்டிலை வைத்துள்ளனர். இதனால் இருவரது ரசிகர்களுக்கும் இடையில் சர்ச்சை ஒன்று ஏற்பட்டிருந்தது. 

இந்நிலையில் நேற்றைய தினம் இரு படங்களின் இயக்குநர்களும் கதைத்து டைட்டில் தொடர்பான பிரச்சினையை தீர்த்துள்ளதாக போட்டோவை வெளியிட்டுள்ளனர்.  இதனால் ரசிகர்கள் மிகவும்  மகிழ்ச்சி அடைந்து கொண்டனர்.


இப்பொழுது அவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கின்ற வகையில் மீண்டும் பராசக்தி படத்துக்கு எதிர்ப்பு ஒன்று வந்துள்ளது. அந்த எதிர்ப்பை  நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பராசக்தி படத்தின் தயாரிப்பு நிறுவனமான நேஷனல் பிக்சர்ஸ் கூறியுள்ளது. இந்நிறுவனம்" எங்களுக்கு உரிமையான படத்தின் தலைப்பை யாரும் வெளியிடக்கூடாது என்று கூறியதுடன் பராசக்தி திரைப்படத்தை டிஜிட்டல் வடிவில் மேம்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் " கூறியுள்ளனர்.
















Advertisement

Advertisement