• Jul 18 2025

கெளதம் கார்த்திக்கை திருமணம் செய்ததற்காக வருத்தப்பட்டேன்: மஞ்சிமா மோகன்

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் கௌதம் கார்த்திக்கை நடிகை மஞ்சிமா மோகன் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் அவரை ஏன் திருமணம் செய்து கொண்டேன் என்று வருத்தப்படுகிறேன் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருமணத்திற்கு முன்பே மஞ்சிமா மோகன் சற்று குண்டாக இருந்தாலும் திருமணத்திற்கு பின்னர் அவர் உடல் எடை அதிகரித்து விட்டதாக கூறப்படுகிறது. அவர் குண்டாக இருப்பதை கர்ப்பமாக இருக்கிறீர்களா என்று சிலர் கேள்வி கேட்பதாகவும் இந்த கேள்விகளை கேட்டு தனக்கு அழுகையை வந்து விட்டது என்றும் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் சமூக வலைதளங்கள் என்றால் மோசமான கமெண்ட்கள் வரும் என்பது தெரியும், அதை நாம் எளிதில் கடந்து விடலாம், ஆனால் நம்முடைய வீட்டில் இருப்பவர்கள் அந்த கமெண்ட்களை பார்த்து வருத்தப்படுகிறார்கள், குறிப்பாக கௌதம் கார்த்திக் வருத்தப்படுகிறார்.

அவர் வருத்தப்படுவதை பார்க்கும் போது நம்மால் அவர் வருத்தப்படுகிறார், அவரை திருமணம் செய்யாமல் இருந்திருக்கலாம் என்று வருத்தப்பட்டேன் என்றும் மஞ்சிமா மோகன் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் என்ன நடந்தாலும் தனது கணவர் தனக்கு ஆதரவாக இருப்பதால் சமூக வலைதளங்களின் கிண்டல்களை நான் தற்போது கண்டு கொள்ளவில்லை என்றும் அதை கடந்து செல்ல பழகி விட்டேன் என்றும் அதே பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement