தமிழ் சினிமாவில் அதிக பெண் ரசிகர்களை கொண்ட நடிகர் ஜெயம் ரவி சமீபத்தில் தனது பெயரை ரவி மோகன் என மாற்றுவதாக அறிவித்திருந்தார். விவாகரத்து சர்ச்சை நண்பி கெனிஷாவுடனான கிசு கிசுக்கள் என பல பிரச்சனைகளை சந்தித்து வரும் இவர் தனது வேலையில் மிகவும் ஆர்வமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
அதாவது இவர் தற்போது ஒரு படத்தில் தயாரிப்பாளர் ஆகவும் இன்னொரு படத்தினை இயக்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இவர் தனது அப்பாவின் கம்பெனியான ஜெயம் கம்பெனியை இப்பொது ஜெயம் ஸ்டூடியோ என பெயர் மாற்றி இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த ஸ்டூடியோவின் சின்னத்தில் வீரத்தின் அடையாளமான சிங்கம் இருப்பதாகவும் இதனால் ஜெயம் சிம்மம் ராசியை சேர்ந்தவர் எனவும் ஒரு சில வதந்திகள் பரவியுள்ளன. மேலும் இதற்கான நோக்கம் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!