• Aug 11 2025

சட்டவிரோத சூதாட்ட செயலி வழக்கு...!நடிகர் ராணா டகுபதி ED அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜர்!

Roshika / 2 hours ago

Advertisement

Listen News!

பிரபல தென்னிந்திய நடிகரும் தயாரிப்பாளருமான ராணா டகுபதி இன்று (11 ஆகஸ்ட்) சென்னை அமலாக்கத்துறை (ED) அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகினார். சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதைச் சுற்றி அமலாக்கத்துறை விசாரணை நடத்தி  வரும் நிலையில், இந்த விசாரணைக்கு அவர் அழைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


சட்டவிரோத சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம் செய்த சினிமா பிரபலங்கள், சமூக ஊடகங்களில் பிரபலமான நபர்கள் மற்றும் யூடியூபர்களுக்கு எதிராக ஹைதராபாத் மற்றும் செகுந்தராபாத் நகரங்களில் காவல்துறையினர் வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இதன் அடிப்படையில், அமலாக்கத்துறை பற்று மோசடி தடுப்பு சட்டம் (PMLA) கீழ் விசாரணைகளை தீவிரமாக நடத்தி வருகிறது.


இந்த வழக்கில், நடிகர் ராணா டகுபதியுடன் சேர்ந்து பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, மஞ்சு லட்சுமி, நிதி அகர்வால், பிரணிதா சுபாஷ், ஸ்ரீமுகி, சியாமளா உள்ளிட்ட பல திரைத்துறையினர், மேலும் யூடியூபர்கள் ஹர்ஷா சாயி, பையா சானி யாதவ், லோக்கல் பே நானி உள்ளிட்ட மொத்தம் 29 பேர் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

விளம்பரங்களில் பங்கேற்றதற்காக இவர்களுக்கு பணம் வழங்கப்பட்டதைப் பற்றியும், அந்த பணத்தின் மூலம் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் நடந்ததா என்பதையும் தெளிவாக்கும் நோக்கில் இந்த விசாரணை நடைபெறுகிறது.


நடிகர் ராணா விசாரணையில் முழுமையாக ஒத்துழைத்ததாகவும், தேவையான ஆவணங்களை வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விசாரணை தொடரும் நிலையில், மேலும் சில பிரபலர்களும் விசாரணைக்கு அழைக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement