• Jul 18 2025

சின்மயிக்கு ஏன் வாய்ப்புக் குறைந்தது..? விளக்கமளித்த நடிகர் ராதா ரவி..!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகில் பல முக்கியமான பங்களிப்புகளை செய்த நடிகரும், டப்பிங் ஆர்டிஸ்ட்களுக்கான சங்கத்தின் முன்னாள் தலைவருமான ராதாரவி, சமீபத்தில் கலந்து கொண்ட நேர்காணலில் சினிமா சங்கங்களைப் பற்றியும், சின்மயி விவகாரத்தைப் பற்றியும் பரபரப்பான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.


நடுவர் நேர்காணலில் ராதாரவியிடம், "டப்பிங் யூனியனை எதிர்த்தால் அவங்களுக்கு வாய்ப்புகள் குறைவாகிவிடும் என்று பலர் கூறுகிறார்கள். இது உண்மையா?" என்று கேட்டார். இதற்குப் பதிலளித்த ராதாரவி, "அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது. யாராவது யூனியனை எதிர்த்தால்அவங்களுக்கு வாய்ப்பு குறைவாக கிடைக்கும் என்கிறார்கள். இவை அனைத்தும் வெறும் கற்பனை," என்றார்.

நடுவர் தொடர்ந்து சின்மயியின் விவகாரம் குறித்து கேள்வி எழுப்ப, ராதாரவி மிகத் திறமையானவர் போல, நேரடியாகப் பதிலளித்தார். அதன்போது, "சின்மயி பாவம். அவர் செய்த ஒரே தவறு, எடுத்தோன ஹார்ட்க்கு போய் இல்லாத விஷயங்களையும் எல்லாம் பேசிட்டு, ராதாரவி அப்படி சொன்னாரு இப்படி சொன்னாருன்னு உண்மையில்லாத பேச்சுக்ளை சொன்னார். அந்த விவகாரம் கடைசியில் தோல்வியில் முடிஞ்சது," என்றார் ராதாரவி.


இது குறித்து மேலும் தெளிவுபடுத்தி, "அவங்க யூனியனில் இருக்க வேண்டாம்னு முடிவு ஆனதுக்குப் காரணம் ஒன்று தான். அந்த சங்கத்தில் ஆண்டு சந்தா கட்டவே இல்லை. அதனால்தான் அவங்களை membershipல இருந்து விலக்கினோம். அது எந்தத் தனிப்பட்ட பகையும் இல்ல," எனவும் கூறினார்.

அத்துடன் ராதாரவி, "நான் அவரை ஒரு முறை சந்தித்து, உங்க கார்ட் காமிக்க சொன்னேன். அது 'yellow card'. அந்த கார்ட் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சப் பணம் செலுத்தி renue செய்திருக்கணும். ஆனால், சின்மயி அந்த process-ஐ பின்பற்றவே இல்லை. அதனால்தான் membership ரத்தாகிவிட்டது," எனவும் விளக்கியிருந்தார்.


Advertisement

Advertisement