• Aug 02 2025

படப்பிடிப்புக்கு வந்த நடிகர் திடீர் மரணம் – திரையுலகில் அதிர்ச்சி!

luxshi / 3 hours ago

Advertisement

Listen News!

பிரபல மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் ஹொட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் திரையுலகத்திலும் ரசிகர்கள் மத்திலும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி, பின்னணி பாடகர் மற்றும் மிமிக்ரி கலைஞராகவும் கலாபவன் நவாஸ் மலையாள சினிமாவில் புகழ் பெற்றவர் கலாபவன் நவாஸ்.

1995 ஆம் ஆண்டு வெளியான ‘சைதன்யம்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர், அதன் பின்னர் பல திரைப்படங்கள், சின்னத்திரை நாடகங்கள் மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமடைந்தார்.


இந்நிலையில், ‘பிரகம்பனம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக கொச்சியில் உள்ள ஒரு தனியார் ஹொட்டலில் தங்கியிருந்தவர், நேற்று மாலை படக்குழுவுடன் வெளியே செல்லவிருந்தார்.

ஆனால், அவர் அறையிலிருந்து நீண்ட நேரமாக வெளியே வராததை கவனித்த குழுவினர் உள்ளே சென்று பார்வையிட்ட போது, அவர் மயக்கமடைந்த நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து அவரை ஹொட்டல் ஊழியர்கள் உடனடியாக  மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

எனினும் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

முதற்கட்ட விசாரணையின் பேரில், மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இருப்பினும், அவரது மரணத்திற்கு காரணமான உண்மைகளை கண்டறிவதற்காக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், அவரது உடல் கலமசேரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதன் பின்னர் அவரது குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலாபவன் நவாஸின் திடீர் மரணம் மலையாள திரையுலகை பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

Advertisement