பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, பாக்கியா ஹோட்டலுக்குத் தேவையான எல்லா பொருட்களையும் கொண்டு வந்து வைச்சு ரெடி பண்ணுறார். அதனை அடுத்து செல்வி பாக்கியா கிட்ட வந்து முதல் இருந்ததை விட இப்ப கொஞ்சம் பரவாயில்ல ஹோட்டலைப் பார்க்க வடிவா இருக்கு என்று சொல்லுறார். பின் அந்த ஹோட்டலுக்கு எழிலும் அமிர்தாவும் போய் நிற்கிறார்கள். அதைப் பார்த்த பாக்கியா எழில் என்ட ஹோட்டல் எப்புடி இருக்கு என்று கேக்கிறார்.
அதுக்கு எழில் போட்டோவில பாத்ததை விட நேருல வடிவா இருக்கு என்று சொல்லுறார். மேலும் கொஞ்சம் சின்னதா இருக்கு சமைக்க காணுமா என்று கேக்கிறார். அதைக் கேட்ட செல்வி இதைத் தான் நானும் சொன்னேன் ஆனா அக்காட குணம் தான் தெரியும் தானே ஒரு முடிவெடுத்தா அதில இருந்து மாறமாட்டா என்று சொல்லுறார்.
அதைக் கேட்ட பாக்கியா என்னடி நீ இப்படி பேசுற ஏதாவது ஒரு பக்கம் கதை என்னோட இருக்கும் போது எனக்கு சப்போர்ட் பண்ணிக் கதைக்கிற இப்ப என்னடா என்றால் அவங்களுக்கு சப்போர்ட் பண்ணுற என்று கேக்கிறார். அதைத் தொடர்ந்து பாக்கியா இந்த ஹோட்டலுக்கு பேரை மாத்தப் போறேன் என்று சொல்லுறார். பின் எழில் இனியாவை ஏர்போர்ட்டிலிருந்து ஏத்துறதுக்காக கிளம்புறார்.
அதனை அடுத்து பாக்கியா தன்னோட ஹோட்டலுக்கு நாளைக்கு திறப்பு விழா செய்யப்போவதாகச் சொல்லுறார். அதைக் கேட்டு ஈஸ்வரி ரொம்பவே கோபப்படுறார். மேலும் கோபியப் பாத்து தலகால் புரியாம ஆடுறா பாத்தியா என்று சொல்லுறார். அதைத் தொடர்ந்து பாக்கியா இனியாவப் பார்ப்பதற்காக சுதாகர் வீட்ட போய் நிற்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!