விஜய் டீவியின் புகழ்பெற்ற காமெடி ஷோக்களின் மூலம் மக்களிடம் பிரபலமடைந்தவர் தான் நடிகர் பாலா. அவரின் தனித்துவமான காமெடி டைமிங் மற்றும் நேர்த்தியான நடிப்பு மூலம் சிறிது காலத்திலேயே ரசிகர்களின் மனதில் நிலைத்துள்ளார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் தற்பொழுது மனித நேயத்துடனும் மக்கள் மனதில் நிலைத்துள்ளார்.
சமீப காலமாக, அவர் சம்பாதித்த பணத்தை சேமிக்காமல் உண்மையில் கஷ்டத்தில் இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு உதவ முனைந்து வருகின்றார். சமூக வலைத்தளங்களில் இவர் பகிரும் உதவித் தகவல்கள் பாராட்டுக்களையும் பெற்றுள்ளன.
அந்த வகையில் தற்போது ஒரு கருணை தரும் நிகழ்வு ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். தமிழ் சினிமாவில் காமெடியன் ஆக நீண்ட வருடங்கள் பணியாற்றியவரே சூப்பர் குட் சுப்ரமணி. படங்கள் மூலம் நம்மை சிரிக்க வைத்தவர். எனினும் இன்று அவர் புற்றுநோயின் 4வது நிலை பாதிப்பால் கடும் சோதனையை சந்தித்து வருகின்றார்.
ஒரு காலத்தில் பெரிய நடிகர்களுடன் சேர்ந்து ஆடிப்பாடி திரையுலகையே கலக்கியவர். இன்று மருத்துவ சிகிச்சைக்கே போராடி வருகின்றார் என்ற செய்தி ரசிகர்கள் மனதை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், நடிகர் பாலா தன்னுடைய சமூக பங்களிப்பை மறுபடியும் நிரூபித்துள்ளார். சூப்பர் குட் சுப்ரமணியின் நிலையை அறிந்த உடனே, அவர் தனது சொந்த பணத்தில் இருந்து 75,000 ரூபாய் வழங்கி உதவியுள்ளார். அத்துடன் இன்னும் அதிகமானோர் உதவ முன்வர வேண்டும் என்பதற்காகவும், பாலா ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், "சூப்பர் குட் சுப்ரமணி சார் நம்ம எல்லாரையும் சிரிக்க வைத்தவர். இன்று அவர் கடுமையான புற்றுநோயால் சிரமப்படுகிறார். மருத்துவ செலவுகளுக்கே கஷ்டப்படுறார். நான் எனக்குரிய இடத்தில் இருந்து 75 ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவியிருக்கிறேன். தயவுசெய்து நீங்களும் உதவுங்கள். நம்மோட ஒரு நபர் நம்ம கண் முன்னாடியே சிக்கித் தவிக்கிறது வருத்தம் தான்." என்று தெரிவித்திருந்தார்.
Listen News!