• May 15 2024

வசூல் மன்னனாக கலக்கி வரும் சிவகார்திகேயனின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

கலக்கப் போவது யாரு என்னும் டிவி நிகழ்ச்சியில் தனது பயணத்தை ஆரம்பித்து இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் சிவகார்த்திகேயன். சமீபகாலமாக இவர் தெரிவு செய்து நடித்து வரும் திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களைக் கவர்ந்து விடுவதோடு சூப்பர் ஹிட் வெற்றியும் பெறுகின்றது.

அந்த வகையில் இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய டான் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. இப்படத்தை அறிமுக இயக்குநரான சிபிச்சக்கரவர்த்தி என்பவர் இயக்கியுள்ளார் என்பதும் முக்கியமாகும்.

அத்தோடு படம் வெளியாகி 12 நாட்களில் ரூ. 100 கோடியை உலகம் முழுவதும் வசூலித்துவிட்டதாக இப்படத்தை தயாரித்த லைகா நிறுவனமே தெரிவித்துவிட்டார்கள். இதனால் சிவகார்த்திகேயன் படக்குழுவும் குஷியடைந்துள்ளனர்.

இப்படி வருடா வருடம் செம ஹிட் படங்களை கொடுத்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா, சுமார் ரூ. 80 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. அத்தோடு இந்த விவரங்கள் ஆங்கில பத்திரிக்கைகளில் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement