• Apr 27 2025

ஜீ தமிழ் சீரியல் நடிகை விஜய் தேவரகொண்டாவுடன் படத்தில் இணைகிறாரா?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரை நடிகையான சௌந்தர்யா ரெட்டி, பாடமதி சந்தியாராகம்  என்ற தெலுங்கு தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானர். தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் மீனாட்சி பொண்ணுங்க என்ற சீரியலில் நடித்து வருகிறார்

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதோடு இந்த தொடரில் அர்ச்சனா, சௌந்தர்யா ரெட்டி, ஆரியன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டாவுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை இணையதளத்தில் பகிர்ந்து உள்ளார் சௌந்தர்யா ரெட்டி. அதற்கு' ரெட்டி ஸ்கொயர்' என கேப்ஷன் போட்டு பதிவிட்டுள்ளார். தற்போது குறித்த புகைப்படம் வைரலாகி வருகின்றன.


விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான தெலுங்கு படங்கள் மட்டுமின்றி தமிழ் படங்களும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் நடித்த நோட்டா திரைப்படமும் பட்டித்தொட்டி எங்கும் பேசப்பட்டது.

இவ்வாறான நிலையில், சீரியல் நடிகை சௌந்தர்யா ரெட்டி எடுத்துக்கொண்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் கேள்வியை  எழுப்பி வருகிறது.


அதன்படி, சின்னத்திரையில் தனது நடிப்புக்காக பல விருதுகளை பெற்ற சௌந்தர்யா ரெட்டி,  தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் புதிய படத்தில் நடிக்க உள்ளாரா என்று  கேள்விகளையும் எழுப்பி உள்ளனர். 

ஆனாலும் தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்  பங்கேற்பதை வழக்கமாகக் கொண்ட சீரியல் நடிகை சௌந்தர்யா, குறித்த தொலைக்காட்சி படப்பிடிப்பின் போது அந்த புகைப்  படத்தை எடுத்திருக்கலாம் என்றும் பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement