• May 18 2025

நயன்தாரா குடும்பத்துடன் மிங்கிள் ஆகிவிட்ட யோகிபாபு.. பூரிப்பில் லேடி சூப்பர் ஸ்டார்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

காமெடி நடிகராக இருந்தாலும் யோகிபாபு மீது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா எப்போதுமே ஒரு மதிப்பு மரியாதை உண்டு என்றும் இருவரும் அண்ணன் - தங்கை உறவு போலவே பழகி வருகிறார்கள் என்றும் நெருங்கிய வட்டாரத்துக்கு மட்டும் தெரிந்த உண்மையாகும்.

’கோலமாவு கோகிலா’ படத்தில் யோகிபாபு உடன் நடிக்க ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் நயன்தாரா ஒப்புக்கொண்டதும் இதற்காக தான் என்பதும் அந்த படத்தில் இருந்து இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் போல் நெருக்கமாகி விட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது கூட அவர் யோகிபாபுவுடன் ’மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார் என்பதும் அது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆனது என்பது தெரிந்தது. இந்த நிலையில் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்துவிட்டு வாருங்கள் வீட்டில் ரொம்ப விசேஷமாக இருக்கும் என்று ஐடியா சொன்னது யோகி பாபு தானாம்.

சொன்னது மட்டும் இன்றி அவருக்கு தெரிந்த கோவில் நிர்வாக அதிகாரிகளிடம் பேசி இருவருக்கும் நல்ல தரிசனம் செய்து கொடுக்க ஏற்பாடும் செய்தாராம். நயன்தாரா மற்றும் விக்னேஷ் வின் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்ற போது அவர்களே எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய மதிப்பு மரியாதையும் கிடைத்தது என்றும் யோகிபாபுவுக்கு திருச்செந்தூர் முருகன் கோயிலில் இவ்வளவு செல்வாக்கா என்று இருவருமே அசந்து போனதாகவும் கூறப்பட்டது.

இதனை அடுத்து எங்கள் குடும்பத்தில் ஒருவர் யோகிபாபு என நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவருமே தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement