• Jun 14 2026

அட்லீ – அல்லு அர்ஜுன் ‘AA23’ படத்தில் யோகி பாபு… ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.!

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் அல்லு அர்ஜுன், ‘புஷ்பா 2’ படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் அட்லீயுடன் கூட்டணி அமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த புதிய படத்தில் நடிகை தீபிகா படுகோன் நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தின் டைட்டில் டீசர், அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 8-ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. அதில் அல்லு அர்ஜுனின் கதாபாத்திரம் அறிமுகமாகும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த படத்தில் நகைச்சுவை நடிகர் யோகி பாபு இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் பேசிய யோகி பாபு, அட்லீ – அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகி வரும் AA23 திரைப்படத்தில் தாம் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.


இந்த தகவல் வெளியானதும் ரசிகர்களிடையே பெரும் உற்சாகம் ஏற்பட்டுள்ளது. அட்லீ இயக்கத்தில் உருவாகும் இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகி வருவதுடன், பல முன்னணி நட்சத்திரங்களும் இதில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement