• Jun 14 2026

நேற்று வரை எதிரிகள்... இன்று இப்படியா? விஜய்-ஸ்டாலின் சந்திப்பில் நிகழ்ந்த சம்பவம்

shali / 1 month ago

Advertisement

Listen News!

தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சந்திப்பு இன்று ஆழ்வார்பேட்டையில் நடைபெற்றது. தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்லாமல் பொதுமக்களிடையிலும் பெரும் கவனத்தை ஈர்த்தது.


ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் இல்லத்துக்கு வந்த முதல்வர் விஜய்யை   மு.க. ஸ்டாலின் அன்புடன் வரவேற்றார். இருவரும் கைகுலுக்கி கட்டியணைத்துக் கொண்ட தருணம் அங்கிருந்தவர்களின் கவனத்தை பெற்றது. 

பின்னர், முதல்வர் விஜய் பூங்கொத்து வழங்கி, மு.க. ஸ்டாலினுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினார். அதற்கு பதிலளிக்கும் வகையில் ஸ்டாலினும் விஜய்க்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து இருவரும் அமர்ந்து சில நிமிடங்கள் அரசியல் மற்றும் தற்போதைய சூழல்கள் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. தேர்தல் பிரசாரத்தின் போது கடுமையான விமர்சனங்கள் இடம்பெற்றிருந்த நிலையில், இந்த சந்திப்பு எப்படி அமையும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால், மிகவும் எளிமையாகவும் மரியாதை மிக்க சூழலிலும் இந்த சந்திப்பு நிறைவடைந்தது.

முதல்வர் விஜய் தொடர்ந்து வைகோ உள்ளிட்ட மூத்த அரசியல் தலைவர்களையும் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Advertisement

Advertisement