• May 16 2026

புருஷன் கூட சண்டைபோட்டு படம் பார்ப்பீங்களா? சிவாஜி தான் கடவுள்! விழாவில் வெடித்த மிஷ்கின்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக மிஷ்கின் காணப்படுகிறார். அண்மைக்காலமாகவே இவர் இயக்கும் படங்கள் பெரிதளவில் வரவேற்பைப் பெறவில்லை. இதனால்  மாவீரன், லியோ என படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

இந்த நிலையில்,  தி ப்ரூஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், கோயிலுக்கு போகாதீங்க படம் பார்க்க தியேட்டருக்கு போங்க என மிஷ்கின் கூறிய விஷயங்கள் வைரலாகி உள்ளன. அதில் அவர் கூறுகையில்,

சூர்யா நடிக்க உள்ள வாடிவாசல் திரைப்படம் ஸ்டாப்பாகி உள்ளது என தகவல்கள் வெளியானது. ஆனால் அதெல்லாம் உண்மை கிடையாது. வாடிவாசல் பெரிய படமாக வரும். அதன் கதையை வெற்றிமாறன் சொன்ன போது மிரண்டு போய்விட்டேன். வாடிவாசல் படத்துக்கு பிறகு சூர்யா லெஜெண்டாக மாறிவிடுவார்.


மேலும் கோயிலுக்கெல்லாம் போகாதீங்க படம் பார்க்க தியேட்டருக்கு போங்க. வீட்டில் வெங்காயம் வெட்டிக்கிட்டே படத்த பாப்பிங்களா? புருஷன் கூட சண்டை போட்டுட்டு படம் பாப்பிங்களா?  புது டிரஸ் போட்டு கார் ஜம்முனு தியேட்டருக்கு சென்று பாப்கான் உடன் படத்தை பார்க்க வேண்டும் என  கூறியுள்ளார்.

மேலும் என்னைக்காவது சிவனை பார்த்து உள்ளீர்களா? என்னை பொறுத்தவரை சிவாஜி கணேசன் தான் சிவன். அவர் நடிப்பில் தான் சிவனை பார்த்தேன். கோயில் உங்களுக்கு எதுவும் தராது தியேட்டரில் சந்தோஷமாக சிரித்து உணர்ச்சிகளை வெளிப்படுத்துங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement