அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகை ஷாலினி பாண்டே, அதன் பிறகு தமிழில் அறிமுகமாகி சில படங்களில் நடித்திருந்தாலும், எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.
சில ஆண்டுகளாக திரையுலகில் பெரிதாக வாய்ப்புகள் இல்லாத நிலையில் இருந்த இவர் தற்பொழுது தனுஷின் "இட்லி கடை" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் 14ம் தேதி நடைபெற்ற தனுஷின் "இட்லி கடை" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டது ரசிகர்களின் மனதைக் கவர்ந்திருந்தார்.
அந்த நிகழ்வில் ஷாலினி பாண்டே, பாரம்பரிய சாறியில் அழகாக வந்திருந்தார். தன்னுடைய எளிமையான மற்றும் அழகான மேக்கப்பும், ஸ்டைலிஷான நடையும் சேர்ந்து, அவரை ஒரு தேவதை போல மாற்றியிருந்தது.
நிகழ்வின் போது பத்திரிகையாளர்களின் கேமராக்களுக்கு முன் போஸ் கொடுத்த அவரின் வீடியோக்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் வேகமாக வைரலாகிக் கொண்டிருக்கின்றன. பலரும், “இதுதான் ரியல் அழகு..! ”என அவரது லுக்கைப் பாராட்டுகிறார்கள்.
Listen News!