• Apr 17 2026

சரவணன் வாழ்க்கையை மாற்றுவாரா அஞ்சலி.? புதிய திருப்பத்தில் டுடே எபிசொட்.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, சரவணன் கோவிலில போய் பிரசாதம் வாங்கிட்டு வரும் போது அங்க ஒரு பொம்பிளையை இடிக்கிறார். பின் அந்த பொம்பிளை சரவணனுக்கு தெரிந்தவங்க என்றதால கொஞ்ச நேரம் கோவிலில ரெண்டு பேரும் கதைச்சுக் கொண்டிருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து அஞ்சலி சரவணனைப் பார்த்து கல்யாண வாழ்க்கை எல்லாம் எப்புடி போகுது என்று கேட்கிறார்.

அதைக் கேட்ட உடனே சரவணன் அமைதியாக இருக்கிறார். பின் சரவணன் அஞ்சலியைப் பார்த்து கல்யாண வாழ்க்கை எப்புடி போகுது என்று கேட்க, அஞ்சலி அதற்கு அது முடிஞ்சு போச்சு என்கிறார். மறுபக்கம் கதிரும் ராஜியும் ஆட்டோவில கதைச்சுக் கொண்டே ரொமான்ஸ் பண்ணிக் கொண்டு போகிறார்கள். அதைத் தொடர்ந்து செந்தில் மீனாவைப் பார்த்து கோபம் இன்னும் தீரல ஆனா கொஞ்சமா குறைச்சிடுச்சு என்கிறார்.


அதைக் கேட்ட மீனா நடிக்காதீங்க என்று சொல்லி செந்தில் கன்னத்தைக் கிள்ளுறார். அதுக்கு செந்தில் யாராவது பார்த்திடப் போறாங்க என்று சொல்லி வெட்கப்படுறார். அதனை அடுத்து கோமதி மீனாவுக்கு போன் எடுத்து செந்தில் உன்கிட்ட பேசினவனா என்று கேட்கிறார். அதுக்கு மீனா பேசிட்டாங்க என்கிறார். பின் மயில் மீனாவுக்கு போன் எடுக்கிறதைப் பார்த்த செந்தில் கோபத்தோட இவங்க எதுக்காக உனக்கு போன் பண்ணுறாங்க என்று கேட்கிறார்.

மேலும், நீ ஏன் இவங்க நம்பரை இன்னும் ப்ளாக் பண்ணாமல் வைச்சிருக்க என்று கேட்கிறார். அதைக் கேட்ட மீனா இவங்க ஏன் போன் எடுக்கிறாங்க என்றே தெரியல என்று சொல்லுறார். பின் கோமதி கதிருக்கு போன் எடுத்து கிளாஸ் எல்லாம் எப்புடி போகுது என்று கேட்கிறார். மேலும், ராஜியை நல்ல படியா பார்த்துக்கோ என்று சொல்லுறார் கோமதி. அதைத் தொடர்ந்து கதிர் ராஜிக்கு சாறி எடுத்துக் கொடுக்கிறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement