கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான யாஷ், தற்போது பல பெரிய படங்களில் பிஸியாக உள்ளார். இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கும் ராமாயணம் படத்தில் ராவணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் அவர், கீது மோகன்தாஸ் இயக்கும் டாக்ஸிக் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இதற்கிடையில், 2022ஆம் ஆண்டு வெளியான KGF சாப்டர் 2 படத்தின் தொடர்ச்சியாக KGF 3 எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக உள்ளது.
சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற சினிமாகான் 2026 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட யாஷ், தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ராவுடன் பல பேட்டிகளில் இதுகுறித்து விளக்கம் அளித்தார்.

அதில் அவர் கூறுகையில், "இப்போது உடனடியாக KGF 3 பற்றிய திட்டம் எதுவும் இல்லை. டாக்ஸிக் மற்றும் ராமாயணம் பாகம் 1 & 2 ஆகிய படங்களில் நான் பிஸியாக இருக்கிறேன். இயக்குநர் பிரசாந்த் நீலுடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். சரியான கதை உருவானவுடன் கண்டிப்பாக KGF 3 உருவாகும்" என தெரிவித்தார்.
KGF சாப்டர் 2 மிகப்பெரிய வெற்றி பெற்று 2022ஆம் ஆண்டின் இந்தியாவின் அதிக வசூல் செய்த படமாக அமைந்தது. இதனால் KGF 3 மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!