• Jul 18 2025

AK64 பட எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்த அஜித்தின் மேலாளர்.! சஸ்பென்ஸை போட்டுடைப்பாரா?

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

'குட் பேட் அக்லி’ படத்தின் வியப்பூட்டும் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் அஜித் குமார் தனது அடுத்த படத்திற்காக மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணையவுள்ளார் என்பது தற்போது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்த புதிய திரைப்படத்தை, முன்னணி தயாரிப்பாளரான ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், இந்த படத்தின் தொழில்நுட்ப தரம், நடிகர் தேர்வு என்பன சிறப்பாக அமைந்த மிகப் பெரிய பட்ஜெட் கொண்ட படமாக உருவாகும் என ரசிகர்கள் ஊகிக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், அஜித்தின் நெருங்கிய மேலாளராக செயல்படும் சுரேஷ் சந்திரா தனது இன்ஸ்டாகிராம் பையோவில் “AK64 Announcement Soon” என புதிதாக குறிப்பிட்டுள்ளார். இது நிச்சயமாக அஜித் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தையும், எதிர்பார்ப்பையும் கிளப்பியுள்ளது. 


ஏற்கனவே AK63 எனப் பெயரிடப்பட்ட ‘குட் பேட் அக்லி’ வெற்றியின் பிறகு, அடுத்த படமான AK64 பற்றி ஆவலுடன் இருந்த ரசிகர்களுக்கு இது ஒரு உறுதியான செய்தி போல அமைந்துள்ளது. அந்தவகையில், அஜித்-ஆதிக்-வேல்ஸ் பிலிம்ஸ் கூட்டணி தமிழ் சினிமாவில் புதிய மாற்றத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement