• Aug 08 2025

" கூலி " படத்தின் தலைப்பை மாற்றிய படக்குழு..! காரணம் என்ன ?

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'கூலி' படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி உலகமெங்கும் பிரமாண்டமாக வெளியிடப்படுகிறது. இந்தப் படம் பான் இந்தியா ரிலீஸாகும் நிலையில் ஹிந்தி மொழி பதிப்பு தொடர்பான புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.


முதலில் இந்த படத்தை 'Majdoor' (மஜ்தூர்) என்ற பெயரில் ஹிந்தியில் வெளியிடவுள்ளதாக போஸ்டருடன் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த பெயர் சமூக வலைதளங்களில் கடும் ட்ரோல்களுக்கு உள்ளானது. இது சினிமாவுக்கு ஏற்ற ஹீரோயிக் டைட்டில் அல்ல என்ற விமர்சனங்களும் வலுத்தன.


விமர்சனங்களை கருத்தில் கொண்டு படக்குழு தற்போது ஹிந்தி டைட்டிலை மாற்றி புதிய பெயராக 'Coolie: The Powerhouse' என அறிவித்துள்ளனர். இந்த மாற்றம் சமீபத்தில் வெளியான புதிய போஸ்டர்களிலும் தெளிவாகக் காணப்படுகிறது. புதிய டைட்டில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருப்பதாகவும் ஹிந்தி மார்க்கெட்டில் இப்படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் உயர்வதாகவும் தெரிகிறது.

Advertisement

Advertisement