• Apr 18 2026

தமிழ் சீரியல் நடிகைகளில் அதிக சம்பளம் யாருக்கு? கம்மி சம்பளம் யாருக்கு தெரியுமா?

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில்  சீரியல்களில் நடிக்கும் நடிகைகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு காணப்படுகின்றது. சில நடிகைகளை தங்கள் வீட்டில் ஒருவர் போலவே மக்கள் கொண்டாடி வருகின்றார்கள். அந்த அளவுக்கு பல நடிகைகள் தங்களுடைய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வைத்துள்ளார்கள். 

இந்த நிலையில்,  பிரபல நடிகைகள் தாங்கள் நடிக்கும் சீரியல்கள் மூலம் எவ்வளவு சம்பாதிக்கின்றார்கள்? அவர்கள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு? என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்கள் நடிக்கும் நாயகிகள் வாங்கும் சம்பள விவரம் பற்றி  விரிவாக பார்ப்போம். 

அதன்படி சன் டிவியில் 4 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றி நடை போடும் கயல் சீரியலில்  நாயகியாக சைத்ரா ரெட்டி அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக காணப்படுகின்றார். அவர் ஒரு நாளைக்கு 45000 இலிருந்து 60 ஆயிரம் வரையில் சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகின்றது. 

அதேபோல சன் டிவியில் ஒளிபரப்பாகும் லட்சுமி சீரியலில் நடிக்கும் ஸ்ருதி ராஜ் ஒரு நாளைக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் பெறுகின்றாராம். 


சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியாக நடிக்கும் மனிஷா மகேஷ் ஒரு நாளைக்கு 30 ஆயிரம் ரூபாய் வாங்குகின்றார். மேலும் சின்னத்திரையில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்றால் அது மூன்று முடிச்சு சீரியலில் நாயகியாக நடிக்கும்  சுவாதி கொண்டே தான். அவர் ஒரு நாளைக்கு 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை சம்பளமாக வாங்கி வருகின்றாராம். இந்த சீரியல் தான் டிஆர்பி ரேட்டிங்கில் நம்பர் 1 இடத்தில் உள்ளது.

அதேபோல விஜய் டிவியில் அய்யனார் துணை சீரியலில் நிலாவாக நடிக்கும் மதுமிதா தான் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக காணப்படுகின்றார். அவர் ஒரு நாளைக்கு 50,000 வரை சம்பளம் வாங்குகின்றார்.  இந்த சீரியல் தான் விஜய் டிவியில் நம்பர் ஒன் சீரியலாக இருந்து வருகிறது. 

கம்மி சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில் சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி கோமதி பிரியா காணப்படுகின்றார்.  அவர் ஒரு நாளைக்கு 12000 ரூபா மட்டுமே  சம்பளமாக வாங்குகின்றார் என கூறப்படுகிறது.  

அதைப்போல சன் டிவியில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில்  ஜனனியாக நடிக்கும் பார்வதி தான் கம்மி சம்பளம் வாங்குகின்றார். அவருக்கு ஒரு நாளைக்கு 12000 ரூபாய் சம்பளம் கொடுக்கப்படுகிறது. 

Advertisement

Advertisement