தமிழ் திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் அவருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நடிகர் கிருஷ்ணா ஆகியோர், சமீபத்தில் போதைப்பொருள் வழக்கில் சிக்கியுள்ளனர். இந்த வழக்கில் இருவருக்கும் ஜாமின் கிடைக்கும் வாய்ப்பு குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. தற்போது, போலீசாரின் விசாரணை, நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் சட்டரீதியான சிக்கல்கள் குறித்து முழுமையான தகவல் இதோ
ஜூன் 24ஆம் தேதி கைது செய்யப்பட்ட ஸ்ரீகாந்த் சென்னை நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டார். அவரின் வழக்கறிஞர், “நடிகர் ஸ்ரீகாந்த் குடும்ப பிணைப்பு உள்ளவர். ஒரு சிறு வயது மகனின் பாதுகாப்புக்காக அவரை ஜாமீனில் விடவேண்டும்” என கோரிக்கை வைத்தனர். எனினும், நீதிமன்றம் ஜாமீனை நிராகரித்து, அவரை 7 ஜூலை 2025 வரை நீதிமன்ற காவலில் அனுப்பியது. தற்போது அவர் புழல் சிறையில் சிறைதண்டனையில் உள்ளார். அங்கு முதன்மை வகுப்பு சிறைத்துறை நிபந்தனைகளின் கீழ் வைத்திருக்கப்படுகிறார்.
மேலும் அதேபோன்று நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டிருந்தார் .இந்த நிலையில் தனக்கு உடல் நிலை சரியில்லை என்னால் போதைப்பொருள் பயன்படுத்த முடியாது என்று மறுப்பு தெரிவித்து இருந்தார். இந்நிலையில் கிருஷ்ணாவும் போதை பொருள் பயன்படுத்தியாகஉறுதி செய்யப்படு வழக்கு பதிசெய்யப்பட்டது.மேலும் தனக்கு உடல் சரியில்லை என்று கூறி ஜாமீனில் விடவேண்டும் என கோரிக்கை வைத்தனர். எனினும், நீதிமன்றம் ஜாமீனை நிராகரித்து, அவரை 7 ஜூலை 2025 வரை நீதிமன்ற காவலில் அனுப்பியது. தற்போது அவர் புழல் சிறையில் சிறைதண்டனையில் உள்ளார். அங்கு முதன்மை வகுப்பு சிறைத்துறை நிபந்தனைகளின் கீழ் வைத்திருக்கப்படுகிறார்.
இந்த நிலையில் இன்று இவர்களில் போதைப் பொருள் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வர்த்தக தகவல்கள் வெளியாகி உள்ளன . மேலும் ஸ்ரீகாந்த், தற்போது சிறையில் இருக்கிறார். அவரது ஜாமின் கோரிக்கை மீதான தீர்ப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிருஷ்ணா, காவல்துறையிடம் ஒத்துழைக்காத நிலையில், அவர் மீது விரைவில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படலாம். இந்த வழக்கு, NDPS சட்டத்தின் கடுமையும், திரையுலகின் பொது நலத்தின் மீதும் ஒளிக்கட்டுமான நிலையை வெளிக்கொண்டு வருகிறது.
Listen News!