• May 15 2026

சிம்பு, விஜய் சேதுபதி படங்கள் திடீரென ரத்து.! - ஷாக்கில் ரசிகர்கள்.. நடந்தது என்ன?

shali / 1 week ago

Advertisement

Listen News!

இன்று (மே 2) தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்த அடையாள வேலைநிறுத்தம் காரணமாக, சென்னை முழுவதும் நடைபெற இருந்த பல முக்கிய திரைப்படங்களின் படப்பிடிப்புகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை எந்தவித படப்பிடிப்பு பணிகளும் நடைபெறக்கூடாது என்ற அறிவிப்பின் பேரில், பல படக்குழுக்கள் தங்களது பணிகளை நிறுத்தியுள்ளன.


இதன் காரணமாக, வெற்றிமாறன் - சிம்பு கூட்டணியில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் விஜய் சேதுபதி நடிக்கும் ‘பாக்கெட் நாவல்’ படத்தின் பணிகளும் இன்று நடைபெறவில்லை. மேலும் ஜெயம் ரவி மற்றும் யோகி பாபு இணைந்து நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங்கும் இந்த வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த அடையாள வேலைநிறுத்தம் தயாரிப்பாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் நடத்தப்பட்டுள்ளதால், திரைத்துறையில் இன்று முழுவதும் அமைதியான சூழல் நிலவியது. படப்பிடிப்பு தளங்கள் வெறிச்சோடியிருந்தன.

இந்நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, இன்று மாலை 6 மணிக்குப் பிறகு படப்பிடிப்புகள் மீண்டும் வழக்கம்போல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட பணிகள் மீண்டும் வேகமெடுக்க உள்ளன.


Advertisement

Advertisement