சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று தற்பொழுது தமிழ் ஊடக உலகில் பெரும் விவாதத்துக்கு காரணமாகியுள்ளது. "வாட்டர் மெலன் ஸ்டார்" என சமூக வலைத்தளங்களில் அழைக்கப்படும் அந்த பிரபல யூடியூபர் ஊடகவியலாளர்களுடன் நிகழ்த்திய வாக்குவாத வீடியோ, தற்போது வைரலாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, யூடியூபர் தன் சமீபத்திய திரைப்படத்தின் விளம்பரத்திற்காக பங்கேற்றிருந்தார். பொதுவாகவே தன்னம்பிக்கையோடு பேசும் இவரிடம், ஒரு பத்திரிகையாளர் “நீ என்ன பெரிய ஆளா?” என்ற கேள்வியொன்றை எழுப்பியுள்ளார்.
இந்த கேள்விக்கு அதிர்ச்சியடைந்த யூடியூபர், மிகவும் கோபமடைந்து “இப்படி எல்லாம் பேசலாமா? இது ஒரு ஊடகக் கலாச்சாரமா?” என்று எதிர்பாராத விதத்தில் பதிலளித்தார். இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகின்றது. அத்துடன் இந்நிகழ்வு அங்கிருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருந்தது.
“வாட்டர் மெலன் ஸ்டார்” என்ற பெயர் வைத்துள்ள இந்த யூடியூபர், ஓரிரு வீடியோக்கள் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அடையாளம் பெற்றவர். அவருடைய அதிரடிக் கருத்துக்கள் இளைஞர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் தொடங்கிய இந்த விவாதம், தற்போது ஊடகத்துறையில் பரபரப்பான விவாதமாக மாறியிருக்கிறது. இது போன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் பத்திரிகையாளர்கள் ஏனையவர்களுடன் கதைக்கும் போது எப்படி இருக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகின்றன.
Listen News!