பாலிவுட் மற்றும் தெலுங்கு திரையுலகங்களை இணைக்கும் அதிரடிக் கூட்டணியில் உருவான படமாக 'WAR 2' காணப்படுகின்றது. இப்படத்தின் முக்கிய நடிகர்களாக ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடிப்பதுடன் இயக்குநராக அயான் முகர்ஜி பணியாற்றுவதாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இப்படத்தின் டீசர் இன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. டீசர் வெளியாகிய சில நிமிடங்களுக்குள்ளே,சமூக வலைத்தளங்களில் அதிகளவில் டிரெண்டாகி வருகின்றது. ரசிகர்கள் இதனைப் பார்த்து “இந்திய சினிமாவின் சூப்பர் ஹிட் படம் இது தான்!” எனக்கூறி வருகின்றனர்.
'WAR 2' என்பது, 2019-ல் வெளியான 'WAR' படத்தின் தொடர்ச்சி ஆகும். முதலாம் பாகத்தில் ஹிருத்திக் ரோஷன் நடித்த அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. 475 கோடிக்கும் மேல் வசூலித்த இந்தப் படம், யாஷ்ராஜ் ஃபிலிம்ஸிற்கான முக்கிய அடித்தளமாக இருந்தது.
இப்போது, 'WAR 2' படமும் மக்கள் மத்தியில் அதிகளவான எதிர்பார்ப்பை உருவாக்கி வருகின்றது. இதில் ஹிருத்திக்குடன் இணையும் ஒரு புதிய, சக்திவாய்ந்த எதிரணி கதாப்பாத்திரத்தில் ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பது, ரசிகர்களிடையே மிகப்பெரிய காத்திருப்பை உருவாக்கியுள்ளது.
Listen News!