• Jul 18 2025

வாய்ப்பு தந்தமைக்கு நன்றி ...! குபேரா படத்தின் பாடலாசிரியர் விவேகா ...!

Roshika / 1 month ago

Advertisement

Listen News!

குபேரா திரைப்படம் ஜூன் 20 ஆம் திகதி திரையரங்கில் வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் இசை வெளியீட்டு விழா நடைபெற்றிருந்தது. இந்த நிலையில் படத்தின் வெற்றிக்கு பாடல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த படத்திற்கு பாடல்கள் எழுதிய பாடலாசிரியர்  கூறிய விடயம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகின்றது .


தமிழ்த் திரையிசைப் பாடலாசிரியர் விவேகா நீ வருவாய் என என்ற படத்தில்  "பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா" என்ற பாடலின் மூலம் தமிழ்த் திரையுலகப் பாடலாசிரியராக அறிமுகமானார். இவர் பல முன்னணி  நடிகர்கள் நடித்த திரைப்படங்களிற்கு பல பாடல்களை எழுதி உள்ளார்.  முக்கியமாக நண்பன், துப்பாக்கி,கந்தசாமி ,வேதாளம் எனப்பல திரைப்படங்களை கூறமுடியும். 


தற்போது விவேகா குபேரா படத்திற்கு முழு பாடலையும் எழுதியதாக கூறியுள்ளார். " போய் வா நண்பா"  பாடல் ரசிகர்களிடம்  நல்ல வரவேற்பை பெற்றுள்ளது . மேலும் சேகர் கம்முலா சேர்ந்து வேலை செய்தது மகிழ்ச்சியை அளிக்கின்றது . அவரோடு பணியாற்றியது  மிக அற்புதமான அனுபவமாக இருந்தது எனக் குறிப்பிட்டுள்ளார். 


மேலும் ஒரு மகத்தான ஒரு மாபெரும் படத்தில் பணி ஆற்றியத்தில் மகிழ்ச்சி இந்த படத்தில் பணி ஆற்றுவதற்கு வாய்ப்பினை தந்தமைக்கு இயக்குநருக்கும் ,தயாரிப்பாளருக்கும் நன்றி தெரிவித்தும் இருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement