• Jul 10 2025

"லால் சலாம் படத்தில் நான் தான் ஹீரோ.. ரஜினி சார் கேமியோ.. " விஷ்ணு விஷால் பேச்சு..

Mathumitha / 8 hours ago

Advertisement

Listen News!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான 'லால் சலாம்' திரைப்படம் கடந்த வருடம் வெளியாகி இருந்தது. இப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படம் ரசிகர்களால் அதிகம் வரவேற்பு கிடைக்கவில்லை வசூல் ரீதியிலும் தோல்வியை சந்தித்தது.


இணையத்தில் வெளியான சமீபத்திய பேட்டியில் நடிகர் விஷ்ணு விஷால் "லால் சலாம் படத்தில் ஆரம்பத்தில் நான் தான் ஹீரோவாக நடித்தேன். ரஜினிகாந்த் சார் சிறப்பு தோற்றமாக 25 நிமிடங்கள் மட்டுமே நடிப்பதாக இருந்தது. ஆனால் பிறகு திட்டத்தில் மாற்றம் செய்து அவரின் காட்சிகள் 1 மணி நேரம் வரை நீட்டிக்கப்பட்டது. இது எனக்கு சந்தோஷமாக இருந்தாலும் படத்தின் போக்கு சற்று மாறியது. அந்த மாற்றம் ரசிகர்களிடையே படம் சரியாக அடையவில்லை. துரதிர்ஷ்டம் தான் " எனத் தெரிவித்தார்.


இந்த விவாதம் தற்போது ரசிகர்களிடையே பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

Advertisement