• Apr 27 2026

'மகுடம்’ சூடத் தயாராகும் விஷால்... விறுவிறுப்பாக முடிந்த முக்கிய படப்பிடிப்பு.!

shali / 3 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால் தற்போது ‘மகுடம்’ திரைப்படத்தில் பிஸியாக நடித்துவருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் அஞ்சலி தோன்றுகிறார். மேலும், படத்திற்கு இசையை ஜி.வி. பிரகாஷ் குமார் அமைத்துள்ளார்.


முதலில் இந்த படத்தை ரவி அரசு இயக்கி வந்தார். ஆனால், படப்பிடிப்பு காலத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக இயக்கத்தில் மாற்றம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அதன் பின்னர், நடிகர் விஷாலே இயக்குநராக பொறுப்பேற்று படத்தை முன்னெடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ‘மகுடம்’ படத்தின் முக்கிய அட்டவணை படப்பிடிப்பு காக்கிநாடாவில் நடைபெற்றது. அங்கு நடைபெற்ற படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்ததை தொடர்ந்து, படக்குழுவினர் தற்போது சென்னை திரும்பியுள்ளனர்.

அடுத்த கட்டமாக, படத்தின் பின்னணி பணிகள் மற்றும் மீதமுள்ள காட்சிகள் சென்னையில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. காக்கிநாடாவில் இருந்து சென்னை திரும்பிய படக்குழுவினரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

‘மகுடம்’ திரைப்படம் ஆக்ஷன் மற்றும் உணர்ச்சி கலந்த கதையுடன் உருவாகி வருவதாகவும், விரைவில் இதன் அதிகாரப்பூர்வ அப்டேட்கள் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.


Advertisement

Advertisement