• Apr 27 2025

நீதிமன்றங்கள் இருக்கிறது என்பதை மறந்து விடாதீங்க.. கட்டப்பஞ்சாயத்தார்களுக்கு விஷால் எச்சரிக்கை..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

விஷால் நடிப்பில், ஹரி இயக்கத்தில் உருவாக்கிய ’ரத்னம்’ திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ள நிலையில் விஷால் தனது சமூக வலைத்தளத்தில் தனக்கு எதிராக கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து செய்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

ஒரு வழியாக கட்டப்பஞ்சாயத்து பயம், நெருடல் இல்லாமல் நடந்து கொண்டிருப்பதாகவும், தமிழ் சினிமா மற்றும் அதன் தயாரிப்பாளர்கள் ரோலர் கோஸ்டர் பயணத்தில் இருப்பதை காண முடிகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

திருச்சி தஞ்சாவூர் திரையரங்க உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு நீதிமன்றங்கள் இன்னும் இருக்கின்றன என்பதை ஞாபகப்படுத்துவதாக கூறிய விஷால், ஒரு மிகப்பெரிய தாக்கத்தை நீங்கள் ஏற்படுத்தி உள்ளீர்கள் என்றும் என்னைப் போன்ற போராளியுடன் இது முடிந்து போகும் என்றும் தெரிவித்துள்ளார்.

எனக்கு எதிராக கட்டப்பஞ்சாயத்து செய்தால் சட்டத்தின் உதவியை நாடுவேன் என்றும் தயாரிப்பாளர்களுக்கும் குடும்பம் இருக்கிறது அவர்கள் யாரும் பொழுதுபோக்கிற்காக படம் எடுக்க வரவில்லை என்றும் தெரிவித்தார்.

ஒரு பொதுச்செயலாளராக, நடிகனாக, தயாரிப்பாளராக இல்லாமல் ஒரு முன்னால் தயாரிப்பாளரின் மகனாக ’ரத்னம்’ என்ற குழந்தையை இன்று ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என்றும் அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement