விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் தற்போது பரபரப்பான கதைக்களத்துடன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. தற்போது சீரியலில் மனோஜ் – ரோகிணி இடையிலான விவாகரத்து வழக்கு முக்கிய திருப்பங்களை ஏற்படுத்தி வருகிறது.
மேலும், தனக்கு எதிராக முத்து திரட்டிய ஆதாரங்களை தனது சாதுரியத்தால் நீதிமன்றத்தில் தவிடுபொடியாக்கிய ரோகிணி, எப்படியும் மனோஜுடன் சேர்ந்து வாழ்வேன் என உறுதியாக இருக்கிறார்.
எனினும் இதற்கு எதிராக, மனோஜை ரோகிணியிடமிருந்து பிரிக்க விஜயா தொடர்ந்து முயற்சித்து வருகிறார். அந்த முயற்சியின் ஒரு பகுதியாக, மனோஜுக்கு கடன் வாங்கிக் கொடுத்து ரோகிணியிடமிருந்து முழுமையாக விலகி வைக்க முடிவு செய்துள்ளார்.

இந்த நிலையில், சற்றுமுன் வெளியான ‘சிறகடிக்க ஆசை’ சீரியலின் புதிய ப்ரோமோவில், மனோஜ் தனது தந்தையைப் போல கையெழுத்து போடப் பழகுகிறார்.. அடுத்த நாள், கந்துவட்டிக்காரின் ஆபிஸுக்கு சென்று வீட்டு பத்திரத்தை அடகு வைக்கத் தயாராகின்றனர். அந்த இடத்தில் சிந்தாமணியும் இருப்பதோடு, அவர் எதிர்பார்த்தபடியே மனோஜும் விஜயாவும் வீட்டு பத்திரத்தில் கையெழுத்து போட்டு விடுகின்றனர்.
இதனால், சிந்தாமணி நினைத்தபடி கூடிய விரைவில் அந்த வீட்டு பத்திரம் தன்னுடையதாகிவிடும் என மகிழ்ச்சி அடைகிறார். இதன் மூலம், விஜயா விரைவில் நடுத்தெருவுக்கு வரும் நிலை ஏற்படலாம் என்றும், மனோஜ் தனது பிசினஸில் பெரும் இழப்பை சந்தித்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டிய சூழல் உருவாகலாம் என்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
Listen News!