• Apr 27 2025

’நான் ஆட்டோகாரி ஆட்டோகாரி.. ஆட்டோ டிரைவராக மாறிவிட்ட விஜய் டிவி ஜாக்குலின்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் மூலம் பிரபலமான ஜாக்குலின் ஆட்டோ ஓட்டும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ள நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியை ரக்சன் உடன் தொகுத்து வழங்கியவர் ஜாக்குலின் என்பதும் அதன் பிறகு அவர் ’தேன்மொழி பிஏ’ உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார் என்பது தெரிந்தது. அதுமட்டுமின்றி நயன்தாரா நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ’கோலமாவு கோகிலா’ திரைப்படத்தில் நயன்தாராவின் சகோதரி ஆக நடித்தார் என்பதும் அதை அடுத்து சில படங்களிலும் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஜாக்குலினுக்கு ஒரு மில்லியன் ஃபாலோயர்கள் இருக்கும் நிலையில் அவர் தனது புதிய படங்கள் மற்றும் வெளிநாடு சுற்றுலா சென்ற புகைப்படங்களை பதிவு செய்து வருவார்.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் ஒரு பெண் ஆட்டோக்காரரிடம் ’நீங்கள் இதுவரை என்னை ஆட்டோவில் உட்கார வைத்து ஓட்டி சென்றீர்கள், இப்போது நான் உங்களை உட்கார வைத்து நான் ஆட்டோ ஓட்ட வேண்டும்’ என்று விருப்பத்தை தெரிவிக்க அந்த ஆட்டோ ஓட்டுநர் ’தாராளமாக ஓட்டுங்கள்’ என்று கூறி ஆட்டோ சாவியை கொடுக்கிறார்.

இதனை அடுத்து ஜாக்குலின் ஆட்டோவை மிகவும் லாவகமாக ஸ்டார்ட் செய்து ஓட்டும் காட்சி அந்த வீடியோவில் உள்ளது. இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் ’நிஜமான ஆட்டோக்காரியாகவே ஜாக்குலின் மாறிவிட்டார்’ என்று கமெண்டில் பதிவு செய்து வருகின்றனர்.


Advertisement

Advertisement