ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இளைய தளபதி விஜய் மற்றும் ஜனநாயகன் படத்தின் படக் குழுவினர் , பல பிரபலங்களும் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் ரசிகர்களும் கலந்து கொண்டு சிறப்பித்து இருந்தனர்.
அது மட்டும் இல்லாமல், ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் பங்கேற்று சாதனையும் படைத்திருந்தனர். அதில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி, அவருடைய டான்ஸ், ஸ்டைல் என்பன ரசிகர்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் காரில் ஏறிச் சென்றபோது நடிகர் விஜய் தடுமாறி கீழே விழுந்தார். அதற்கு பின்பு அவருடைய காரும் விபத்தில் சிக்கியது. இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
இந்த நிலையில், விஜய் மலேசியா வந்ததால் பண மழை கொட்டியதாக வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில், ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு மில்லியன் கணக்கில் டிக்கெட் விற்பனை ஆகியுள்ளது.
ஒரு ஒற்றை முகத்திற்கு இவ்வளவு பெரிய மரியாதையா என ஆச்சரியமாக உள்ளது. விஜய் இந்த நிகழ்ச்சிக்காக மிகப்பெரிய நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தார். அதில் இடம்பெற்ற பெரிய காமெடி என்னவென்றால், விஜய் ஏர்போர்ட்டில் இருந்து காரில் இறங்கி வரும் போது அவரை காணலாம் .
ஆனால் அவரை இன்னும் நெருக்கமாக பார்க்க வேண்டும் என்றால் 2000 ரூபாய் கொடுங்கள் என்று ஹோட்டல் சார்பில் கூறியுள்ளார்கள். மேலும் அங்கு ஒரு ஹாலில் விஜய் கை காட்டி விட்டுப் போவார் எனக் கூறியதால், அங்கு 1500 பேருக்கு மேல் அமர்ந்து இருந்துள்ளனர். அவர்களை கடந்து தான் விஜய் அவருடைய ரூமுக்கு செல்ல வேண்டும்.
இதன் போது விஜய் அங்கு வந்து தன்னுடைய கைகளை அசைத்து காண்பித்துள்ளதோடு, அங்கு இருந்த வயதான ஒருவருடன் புகைப்படம் எடுத்துள்ளார். இது எம்ஜிஆர் காலத்தை நினைவுபடுத்தும் படி அமைந்தது. அவரும் வயதானவர்களை எந்தவித பாகுபாடும் பார்க்காமல் கட்டிப்பிடித்து அன்பாக அனைத்து கொள்ளுவர்.
ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல், நிற பாகுபாடு இல்லாமல் எம்ஜிஆர் எப்படி அன்பு செலுத்துவாரோ அதேபோல விஜய்யும் இருந்தார். ஆனால் அந்தப் பெண்மணியும் கிட்டத்தட்ட 1500 பணம் கொடுத்து தான் உள்ளே சென்றுள்ளார் .
மேலும் அந்த இடத்தை சுற்றி இருந்த கடைகளுக்கும் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதில் கோடிக்கணக்கான லாபம் கிடைத்திருக்கும். இப்படி விஜய் போகும் இடமெல்லாம் பணமழை பொழிந்து சென்றுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
Listen News!